குடும்பம்: கபெலிடே
கராகல் என்பது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு நடுத்தர அளவிலான காட்டுப் பூனை ஆகும். இது வலுவான நீண்ட கால்கள், டஃப்ட் காதுகள் மற்றும் நீண்ட கோரைப் பற்களை கொண்டது. இப்பூனை முதன்முதலில் ஜெர்மன் இயற்கை ஆர்வலர் ஜோஹான் கிறிஸ்டியன் டேனியல் வான் ஷ்ரெயரால் விஞ்ஞான ரீதியாக 1776 ஆம் ஆண்டில் விவரிக்கப்பட்டது.
இரவு நேரத்தில் வெளியே வரும், இது சிறிய பாலூட்டிகள், பறவைகள் மற்றும் கொறித்துண்ணிகளை வேட்டையாடுகிறது. 12 அடி உயரத்திற்கு மேல் பாய்ந்து பறவைகளைப் பிடிக்கும். சராசரி ஆயுட்காலம் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் ஆகும். ரோமங்கள், மென்மையான, குறுகிய மற்றும் அடர்த்தியானவை. பின்னங்கால்கள் முன்கைகளை விட நீளமாக உள்ளன. முகங்களில் தனித்துவமான கருப்பு அடையாளங்களைக் கொண்டுள்ளன.
ஆப்பிரிக்காவில் சஹாராவின் தெற்கே பரவலாக காணப்படும் இது ஆசியாவில் அரேபிய தீபகற்பம், மத்திய கிழக்கு, துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் முதல் மேற்கு இந்தியா வரை பரவி உள்ளது. குறைந்த பழைப்பொழிவு கொண்ட வறண்ட பகுதிகளில் விரும்பி வாழும். இதன் வாழ்க்கை மிகவும் ரகசியமானது. மனிதர்களை அரிதாகவே தாக்குகின்றன. விவசாய விரிவாக்கம், சாலைகள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படுவதால் இவற்றின் வாழ்விட இழப்பு ஏற்படுகிறது.
துருக்கி மற்றும் ஈரானில் சாலை விபத்துக்களில் கேராக்கல்கள் அடிக்கடி கொல்லப்படுகின்றன. கராகல் ஐ.யூ.சி.என் சிவப்பு பட்டியலில் 2002 முதல் பாதுகாக்கபடவேண்டிய விலங்கு என பட்டியலிடப்பட்டுள்ளது.