இயற்கைப் பேரழிவுகள் என்பதை மனிதனால் தடுக்க முடியாது. ஒரு பெரிய வெள்ளத்துக்குப் பிறகு, மீண்டும் விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விதைகள், தானியங்கள் தேவை.
வெள்ளத்திலிருந்து தானியங்களை, விதைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கு உயரமான இடம் அவசியம். ஊரிலேயே உயரமான இடம் என்றால் அது கோயில் கோபுரம்தான். அதற்காகத்தான் நம் முன்னோர்கள் கோயில் கலசங்களில் தானியங்களைப் பாதுகாத்து வைக்கும் வழக்கத்தைக் கடைப்பிடித்தார்கள்.
இந்தக் கலசங்கள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. அதில் கொட்டப்படும் தானியங்களும் உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.
பொதுவாக நெல், வரகு, கேழ்வரகு, தினை, சோளம், மக்காச்சோளம், சாமை, எள் ஆகியவற்றைக் கலசங்களுள் கொட்டினார்கள். அதில் வரகு தானியத்தை அதிகமாக நிரப்பினார்கள். ஏனென்றால் முளைப்பதற்கு முன்பான உறக்க நிலையில் இருக்கும் ஒரு தானியத்தில் எப்போதும் உயிரோட்டம் இருக்கும். அந்த உயிரோட்டம்தான், தானியத்தின் முளைப்புத்திறனை, அதைச் சுற்றி ஒரு காந்தப் புலத்தை உருவாக்கிப் பாதுகாத்து வைத்திருக்கும்.
அந்த காந்தப் புலம் பன்னிரண்டு ஆண்டுகள் வரை நீடித்து இருப்பது வரகு தானியத்தில் மட்டும்தான். அதாவது பன்னிரண்டு ஆண்டுகள் கழித்தும் வரகு முளைப்புத் திறனுடனேயே இருக்கும்.
அதனால்தான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடத்தி, கோயில் கும்பங்களில் உள்ள வரகு தானியத்தை மாற்றியமைக்கும் வழக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.