மசாலா பூரியின் செய்முறைக் குறிப்புகளைக் காணலாம்!
தேவையான பொருட்கள் :
ரவை- அரை கப்,
தண்ணீர் அரை கப்,
கோதுமை மாவு - 1 கப்,
உருளைக்கிழங்கு (வேகவைத்தது) -1 (பெரியது),
சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீஸ்பூன்,
உப்பு தேவைக்கு,
சீரகம் - 1 ஸ்பூன்,
பச்சை மிளகாய்-1 (பொடியாக நறுக்கியது).
செய்முறை :
அரை கப் ரவையை அரை கப் சுடு தண்ணீர் விட்டு அரை மணி நேரம் ஊற வைத்து விடவும். பின்னர், அத்துடன் சில்லி ப்ளேக்ஸ், உப்பு, சீரகம், பச்சை மிளகாய் போன்றவற்றைச் சேர்க்கவும். இதனுடன் நன்கு வேகவைத்து கட்டி இல்லாமல் மசித்த உருளைக் கிழங்கை சேர்த்து நன்கு பிசையவும். இக்கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்ந்து கெட்டியாக சப்பாத்தி மாவு போல் பிசைந்து சிறு சிறு பூரிகளாக தேய்க்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பூரிகளைப் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு எல்லாவிதமான சட்டினியும் ஜோடி சேரும்.