ஆரம்பத்தில் நீரிழிவுக்கு காரணம் உடலில் தாதுக்கள் அளவு மீறி வெளிப்படும் போது சர்க்கரை சத்து என்ற நோய் உண்டாகும். இதனால் சிலர் இளைப்பார்கள். சிலர் இளைக்காமல் பருமனாக மாறுவார்கள். இதற்கான காரணம் கணையம் (கிட்னி) கெட்டுவிடும் சூழ்நிலை என்றே நினைத்து வரும் முன் காப்பதே நலம்.
1. இளைத்தவர்கள், நாவல் பழக்கொட்டையை ஒருமாதம் நன்றாக வெயிலில் வைத்து இடித்து தூளாக்கி உண்ண வேண்டும்.
2. இரண்டு மூன்று வெண்டைக்காய்களின் காம்பு மற்றும் அடிப்பகுதியை நீக்கிவிட்டு நெடுக்கு வாட்டில் கீறல்களைப் போட்டு விட்டு இரவு முழுக்க டம்ளர் நீரில் மூடிவைக்க வேண்டும். காலையில் அந்த நீரை மட்டும் அருந்த வேண்டும்.
3. உப்பில் ஊறிய ஊறுகாய், கருவாடு, அப்பளம், வற்றல் சாப்பிடக்கூடாது. அசைவம் என்றால் வாரத்தில் 100 கிராம் இறைச்சி மட்டும் கொழுப்புச் சத்து இன்றி சாப்பிடலாம்.
4. கோதுமை மாவில் ரொட்டி, அடையாக செய்து
சாப்பிடுவது நல்லது. இல்லாத பட்சத்தில் கோதுமையை 2, 3-ஆக உடைத்து நீர்விட்டு வேக வைத்தோ, வடித்து அல்லது வடிக்காமல் கஞ்சியாகவோ சாப்பாட்டிற்கு பதிலாக உட்கொள்ள சர்க்கரையின் அளவு குறையும்.
5. கேழ்வரகு, கோதுமை போன்ற தானிய வகையில் நார் தன்மை அதிகம் இருப்பதால் அவற்றை உரிய முறையில் உரிய அளவில் உட்கொண்டுவரவும். அதிகமாக சாப்பிட்டாலோ கூழ் வகையாக தயாரித்து உண்டாலோ சர்க்கரையின் அளவு அதிகரித்து விடும்.
6. முருங்கை கீரையுடன் எள் சேர்த்து சமைத்து சாப்பிட நீரிழிவு நோய் மற்றும் சர்க்கரை கட்டுப்படும்.
7. வாழைபிஞ்சு காயை சமையலில் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் வயிற்றுப் புண் சர்க்கரைச் சத்து குறையும்.
8. வெள்ளைப்பூண்டு 6, 7 பெரிய இதழ்களை பசும்பாலில் போட்டு காய்ச்சி பாலையும், வெள்ளைப் பூண்டு & வெந்தயத்தையும் சாப்பிட்டு வந்தால் ஒரு வாரத்திலே சர்க்கரை சத்து குறைந்து நீரிழிவு நோயாளிக்கு உதவும்.
9. விளாம் வேருடன் ஆவாரை வேர் மற்றும் கிராம்பு ஆகியவற்றை சமஅளவு எடுத்துக் கொண்டு, எருமை மோரில் வேக வைத்து, அதனை தயிரில் கலந்து அருந்தி வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
10. சீந்தில் கொடி, கீழாநெல்லி, நாவல்பட்டை, கோரைக்கிழங்கு ஆகியவற்றை பொடி செய்து ஒரு பங்காவும், கடுக்காய், கருவேப்பிலை, நெல்லி வற்றல் ஆகியவற்றை பொடி செய்து 2 பங்காகவும் கலந்து அதில் 1-2 கிராம் ஆக இருவேளை நீரில் கலந்து சாப்பிட்டு வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
11. சீந்தில் கொடி, சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து நசுக்கி நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சர்க்கரை நோய் தீரும்.
12. ஆலம்பட்டையை இடித்து சாறு பிழிந்து 10 பங்கு பால் சேர்த்து குடித்து வர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
13. முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாக பூச நீர்க்கட்டை உடைத்து சிறுநீரைப் பெருக்கும்.
14. மல்லிகை பூக்களை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடி செய்து தேநீர் போல் அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் ஏற்பட்ட கற்கள் நீங்கும். மேலும் நீர்சுருக்கு, நீர் எரிச்சல் ஆகியவையும் விலகும்.
15. கரும்பின் வேரை கழுவி நறுக்கி, நீர்விட்டுக் காய்ச்சி குடிக்க சிறுநீர் எரிச்சல் தீரும்.
16. சிறிய வெங்காயம் 100 கிராம் அளவு எடுத்து தோல் நீக்கி ஒன்றிரண்டாக தட்டி 3 தேக்கரண்டி வெந்தயத்தை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதற்கு மேல் வெங்காய விழுதை பரவலாகப் பரப்பி வைத்து ஒரு நாள் முழுக்க இப்படியே வைத்திருந்து, பிறகு வெந்தயத்தை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ளவும். மூன்று தினங்களுக்கு அரை டீஸ்பூன் வெந்தயத் தூளை மோரில் கரைத்து குடித்து வர நீர் சுக்கல் சரியாகும்.
17. துளசிச்சாறு வேப்பிலைச்சாறு இவைகளை சம அளவு உட்கொண்டால் நீர் கடுப்பு குணமாகும்.
18. பூசணிக்காயை கறியாக சமைத்து உண்டால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். மனக்கலக்கம் நீங்கும். சிறுநீர் பெருகும், சிறுநீர் எரிச்சலும் குணமாகும்.
19. மூங்கில் மர அரிசியை உணவு வகைகளுடன் சேர்த்து உட்கொண்டு வர நீரிழிவு நோய் குணமாகும்.
20. அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, எலுமிச்சம்பழம் அரைப் பகுதி மட்டும் பிழிந்து குடித்துவர, நீர் கடுப்பு & நீரிழிவு குணமாகும்.
21. ஆவாரம்பூ, ரோஜா, மொட்டு, யானை நெருஞ்சி இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து, அந்தப் பொடியை பாலுடன் கலந்து காய்ச்சி தினமும் இருவேளை குடித்து வர நீரிழிவு நோய் குணமாகும்.
22. தாழம்பூ விழுதை இடித்து சாறு பிழிந்து நெய்யுடன் கலந்து காய்ச்சி 5 மி.லி. அளவு உட்கொண்டு வர நீர்கடுப்பு, நீர்சுருக்கு குணமாகும்.
23. உளுந்தை கழுவி இரவு முழுவதும் நல்ல நீரில் ஊற வைத்து மறுநாள் அதிகாலையில் இந்த நீரை அருந்தி வர சிறுநீர் பெருகும். நீர்கட்டு, நீர்கடுப்பு, நீர் எரிச்சல் முதலியன குணமாகும்.
24. தோற்றாங்கொட்டையை பவுடராக்கி பசும் பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் வெட்டை நோய் குணமாவதுடன், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலும் கட்டுப்படுத்துகிறது.
25. முழுகீழாநெல்லிச் செடிகளை ஒரு கைபிடி அளவு எடுத்து நசுக்கி, அதை 2 டம்ளர் நீரில் இட்டு ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 வேளைக்கு என்று 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் தீரும்.
26. தண்டுக்கீரையில் இரும்புச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். எரிச்சலுடன் சிறுநீர் கழித்தல், நீர்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் உள்ளவர்களுக்கு இந்த கீரையை அடிக்கடி உணவில் உட்கொண்டு வர நிவாரணம் பெறலாம்.
27. எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்துவடன் சர்க்கரை நோயாளியின் சர்க்கரை கட்டுப்படும். எலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து சூடு ஆக்கிய நீரை குளிரச் செய்து குடித்து வந்தால் உடல் பருமன் குறைய வாய்ப்பு உள்ளது.
28. புங்காம்பூவை நிழலில் உலர்த்தி நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து இடித்து சலித்துக் கொள்ளவும். இதில் 1-2 கிராம் அளவு தேன் கலந்து காலை, மாலை இருவேளை 40 நாடுகள் தொடர்ந்து சாப்பிட சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் மேக நோய்கள் எவ்வளவு கடுமையாக இருப்பினும் குணமாகும். இந்த மருந்தை உண்ணும் போது புளி & வாயு பதார்த்தங்கள் உட்கொள்ளக் கூடாது.
29. மந்தார மரத்தின் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி தேனில் கலந்து உட்கொண்டு தேவையற்ற சதைகளை குறைத்து உடலை கட்டுக் கோப்பாக்கும்.
30. வறுத்த பெருஞ்சீரகத்தை வெந்நீரிலிட்டு ஊற வைத்து வடிகட்டி நீரை மட்டும் சாப்பிட சிறுநீர் தாரளமாகப் பெருகும். உடல் அசதி குறைவதுடன் சர்க்கரைச் சத்தின் அளவும் கட்டுப்படும்.