தேவையான பொருள்கள்
1. ராகி சேமியா 100 கிராம்
2. நறுக்கிய கேரட், கோஸ்
3. குடை மிளகாய் - அரை கிண்ணம்
4. உட்பு, எண்ணெய் தேவைக்கேற்ப
5. பெருங்காயத்தூள் - சிறிது
6. பச்சரிசி - 100 கிராம்
7. துவரம்பருப்பு - 50 கிராம்
8. கடலைப்பருப்பு - 50 கிராம்
செய்முறை
சுடுநீரில் உப்பு, எண்ணெய், ராகி சேமியாவை சேர்த்து வடித்து உதிர்க்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை அரைமணி நேரம் ஊறவிட்டு கரகயவென அரைத்து, ராகி சேமியா, நறுக்கிய காய்கறிகள், பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, சூடான தோசைக்கல்லில் கனமான அடைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் பார்த்து சூடாக பரிமாறவும். சுவையான ராகி சேமியா வெஜிடபின் அடை தயார்!