தேவைமான பொருட்கள்
1. நன்கு பழுத்த இலந்தைப்பழம் (நாட்டு இலந்தை) - 1 கப்,
2. பேரீச்சம் பழம் கொட்டை நீக்கியது - 5,
3. உலர் திராட்சை - 1 டீஸ்பூன்,
4. வெல்லத் தூள் - 4 கப்,
5. ஏலத்தூள்- சிறிது,
தாளிக்க:
1. நெய் - 2 டீஸ்பூன்,
2. முந்திரித் துண்டுகள் -1டீஸ்பூன்.
செய்முறை
இலந்தைப்பழத்தைக் கழுவி கொட்டை எடுத்து, பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சையுடன் மிக்ஸியில் அடித்து எடுக்கவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி, பாகு காய்ச்சவும். மிக்ஸியில் அரைத்ததைப் போட்டு, பாகுடன் கலந்து கொதி வந்தவுடன் இறக்கவும். ஏலத்தூள் சேர்க்கவும். முந்திரியை நெய்யில் வறுத்து சேர்த்துப் பரிமாறவும்.