மலேசியாவின் தேசியப் பெயர் : Persckutuan Tanah Malaysia
மலேசியாவின் தலைநகர் : கோலாலம்பூர்
மலேசியாவின் பரப்பு : 3,30, 434 ச.கி.மீ,
மொழி : மலாய், ஆங்கிலம், சீனம், தமிழ்
மக்கள் தொகை (2006) : 2,43,85,858
சமயம் : இஸ்லாம், புத்தம், தாவோயிசம், இந்து, கிருத்தவர், சீக்கியர்
மலேசியாவின் அமைவிடம் :
ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு. இதன் மேற்கில் சுமத்ரா (இந்தோனேஷியா); கிழக்கில் தென் சீனக்கடல்; வடக்கில் தாய்லாந்து; தெற்கில் சிங்கப்பூர் எல்லைகளாக அமைந்துள்ளன.
எல்லைகள் :
புருனே - 381 கி.மீ., இந்தோனேஷியா-1782 கி.மீ., தாய்லாந்து- 506 கி.மீ.
வரலாறு :
1867 முதல் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தது. 1963-இல் மலேயா, சிங்கப்பூர், வட போர்னியோ (ஸபாஹ்), சாரவாக் போன்றவை ஒன்றிணைந்து மலேஷியா உருவானது. 1965- இல் சுய விருப்பத்தின் பேரில் சிங்கப்பூர் பிரிந்து தனிக் குடியரசானது. முன்னாள் மலேயா பகுதியின் ஒன்பது அதிபரில் இருந்து நாட்டின் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். 68 உறுப்பினர் கொண்ட செனட்டும், 177 உறுப்பினர் கொண்ட பிரதிநிதி சபையும் உள்ளது. 2004, மார்ச்சில் ஒரு இடைத் தேர்தல். பல வருடங்களாக சிறையில் இருந்த துணைப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் விடுதலை. 2006 ஏப்ரலில் சர்ச்சைக்கிடமான சிங்கப்பூர் பாலக்கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்தது.
மலேசியா சுதந்திரம் பெற்ற நாள் : ஆகஸ்ட்1, 1957.