ரோஜா பழத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
ரோஜா பழ எண்ணெயைப் பயன்படுத்துவதும், ரோஜா பழத்தை உட்கொள்வதால் சருமத்தில் சுருக்கம் மறையும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
தினமும் 100 மி.கி அளவிலான ரோஸ் ஹிப் உட்கொண்ட ஒருவரின் உடலில் கொழுப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்ததோடு, தொப்பை பகுதியை சுற்றியுள்ள கொழுப்புகளும் குறைந்திருக்கிறது.
தினமும் மூன்று மில்லி கிராம் ரோஜா பழத் தூள் சாப்பிட்டு வந்தால், தோல் சுருக்கங்கள் குறைந்து, தோலில் ஈரப்பதம் அதிகரிக்கும். மினு மினுப்பு கணிசமாக கூடும் என்கிறது ஒரு சிறிய ஆய்வு.
ரோஜா பழத்தில் டிலிரோசைடு எனும் கலவை காரணமாக இது கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தக்கூடும் என்று
ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Buy Rose Water : Buy Now!
கவனிக்க வேண்டிய விஷயம்: ரோஜா பழத்தில் மிக அதிக அளவு வைட்டமின் சி இருப்பதால், சிறுநீரக கற்கள், ரத்த சோகை மற்றும் ஹீமோக்ரோமாடோசிஸ்(இரும்புச் சத்து கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். எந்தவொரு புதியதையும் முயற்சிக்கும் முன் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது.