சிறுவர்களுக்கான எளிய வீட்டு மருத்துவக் குறிப்புகள்!
சிறுவர், சிறுமியருக்கு மூச்சுத் திணறல் இருந்தாலோ, விளையாடும்போது அதிக மூச்சு வாங்கினாலோ ஒரே ஒரு செம்பருத்திப் பூவை எடுத்து, அதில் உள்ள மகரந்தத்தையும், காம்பையும் நீக்கிவிட்டு, சூடான பாலில் தலைகீழாக முக்கி எடுக்கவும். பூவின் சாறு முழுவதும் பாலில் கலந்து விடும். அந்த பாலை மட்டும் குடித்து வந்தால் மேற்கண்ட தொந்தரவுகள் நீங்கும். 👇
வல்லாரை இலையை நிழலில் உலர்த்திவிட்டு, பின்னர் வெயிலில் காயவைக்கவும். அவற்றை நன்றாக இடித்து, சலித்து பொடியாக்கி சூடான பாலில் கலந்து குடித்து வந்தால், ஞாபக சக்தி அதிகரிக்கும். படிக்கின்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இதுவொரு அருமருந்தாகும்.