தேவையான பொருட்கள்
1. கத்தரிக்காய்த் துண்டுகள் -1 கப்
2. உப்பு - தேவைக்கு
3. எண்ணெய் - தேவையான அளவு
4. மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
5. புளி - நெல்லிக்காய் அளவு
6. தனியாத்தூள் - 1டேபிள் ஸ்பூன்
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கத்தரிக்காய்த் துண்டுகளை சேர்த்து வதக்கவும், ஆறியதும் உப்பு, புளி, மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து அரைத்துப் பரிமாறவும். தயிர் சாதத்துடன் தொட்டுக் கொள்ள சிறப்பாக இருக்கும்.