கிராமத்துப் பிண்ணனி கொண்ட இவர், முயற்சி செய்தால் சினிமாக் கனவை நனவாக்கலாம் என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறார். " திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தளவாய்புரம் எனும் கிராமம்தான் என் சொந்த ஊர். ஆடுகள், தோட்டம், தோட்டத்துக்குள் சிறிய வீடு என்று அழகான சூழலில் வளர்ந்தவள்" என்கிறார்!
சிறு வயதில் பள்ளி, கல்லூரியில் பேச்சு, நடனம் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் ஆர்வத்தோடு பங்கேற்பேன் என்றும், திரைப்படங்கள், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவர்களையும் ஆர்வமாக பார்த்ததில் இருந்து தனக்கு சின்னத்திரை தொகுப்பாளினி ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்ததாகக் கூறுகிறார்.
"பரியேறும் பெருமாள்" திரைப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடந்தபோது இவருக்கு சிறிய கதாப்பாத்திரத்தில் முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது.
பின்னர் முதுகலை பட்டப் படிப்பிற்காக சென்னை வந்தபின் குறும்படம், யூடியூப் வீடியோ என் கிடைத்த அத்தனை வாய்ப்பையும் பயன்படுத்திய பின்னர், சந்திரகுமாரி என்ற தொடரில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
பாண்டியன் ஸ்டார்ஸ் தொடரில் முதலில் வேறொரு கதாப்பாத்திரத்திற்கு முயற்சி செய்தேன்! ஆனால், அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. பின்னர் ஆறு மாதம் கழித்து அதே தொடரில் முயற்சி செய்தபோது, ஐஸ்வர்யா கதாப்பாத்திரத்தில் வாய்ப்பு கிடைத்தது என்றும் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினத்தந்தி, தேவதை