கருவூரார் சித்தர் பற்றிய சில தகவல்கள்
கருவூரார் என அழைக்கப்ப்படும் கருவூர்ச்சித்தர் பதிணென் சித்தர்களில் ஒருவராவார் . கருர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கல்யாணபசுபதிஷ்வரர் திருக்கோவில் தென்மேற்கு மூலையில் தனி சன்னதி அமைந்துள்ளது.
இவர் தஞ்சை பெரிய கோவில் உள்ளே ஜீவசமாதியாகி உள்ளதாகவும் சில குறிப்புகள் உள்ளன.அதேபோல கரூர் சிறப்பு மிக்க வெண்ணெய்மலை (நவநீதகிரி) ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் திரு உருவச்சிலையாக கருவூரார் அமர்ந்துள்ளார் .
இராஜராஜசோழன் காலத்தில் வாழ்ந்த இவர் பல அற்புத சித்துக்களை அறிந்தவர் . பழனி சித்தர் போகரின் சீடராக மாணக்கராக இருந்து பல சித்துக்கள் அறித்தவர் .
கருவூரார் செய்த சில அற்புத சித்துக்கள்:
கருவூரார் ஒரு முறை திருநெல்வேலி சென்று நெல்லையப்பரை வணங்கி நெல்லையப்பா வருக வருகவென அழைக்க ஈசன் வராது போகவே கோபங்கொண்ட கருவூரார் ஈசன் நான் அழைத்து வராததால் இங்கில்லாமல் போகட்டுமென சபித்து நெல்லையை விட்டு வெளியேறினார் . ஈசன் அடியார்களை உடனடியாக அழைத்து கருவூரார் நான் வர காலம் தாழ்த்தியதால் எம்மை சபித்து செல்கிறார் . வாருங்கள் நாம் அழைத்து வருவோம் எனக்கூறி கருவூரார் முன் அடியார்களுடன் தோன்றி சமாதானம் செய்து ஈசனே காட்சி கொடுத்ததாக வரலாறு ,
பின் திருவிடைமருதூரில் ஈசனை சென்று வணங்கிய கருவூரார் சித்தருக்கு, சிவன் காட்சி தந்து கரூர்க்கு வருக என அழைத்ததார் . சிதம்பரம் நடராஜர் உருவச்சிலை போகரின் ஆணையால் கருவூரார் உருவாக்கியதாகும் . இவர் எழுதிய கெவுன சாஸ்திரம் ,சித்த மருத்துவம் நூல்கள் புகழ்பெற்றது.
மழைவாரத காலத்தில் இவர் வாக்கால் மழை பொழிந்ததாம் . ஒருமுறை சிவபெருமான்திருக்கோவில் கதவு திறக்காதபோது கவிபாடியே திறந்தாராம் . சிவத்தல யாத்திரையாக சென்ற இவர் வராகிரி, திருக்குருகூர், திருச்செந்தூர், திருநெல்வேலி ஆகிய ஆடங்களில் பல அற்புதங்கள் செய்துள்ளார் .
இராஜ இராஜசோழன் தஞ்சைபெரிய கோவில் கட்டியபோது இராஜ இராஜ சோழன் தஞ்சை பெரிய கோவில்வடிமைக்க பல ஆலோசனைகளை வழங்கினார். தஞ்சைப்பெரிய கோவில்கட்டிக்கொண்டிருந்த இராஜ இராஜ சோழன் மற்ற சிலரின் ஆலோசனையின் படி கருவூராரின் சில ஆலோசனைகளை மதியாது சில செயல்கள்களை செய்ய மூலவரான தஞ்சாவூர் பெரிய கோவில் லிங்கத்தை சரியாக பொருத்த முடியாமல் பொறியாளர்கள் அவஷ்தைப்பட, இராஜ இராஜன் கருவூராரின் அருமையை உணர்ந்து மன்றாடி கேட்டுக்கொள்ள மூலஷ்ஸ்தான கட்டுமான பகுதிக்கு வெற்றிலையை வாயில் மென்றபடி வந்த கருவூரார் சரியாக பிடிக்கும் படி கூறி தன் வெற்றிலைச்சாற்றை மென்று உமிழ்தாராம் . மூலவர் சிலை ஆடாமல் அசையாமல் பிடித்துக்கொண்டது. போகரின் சீடாரான கருவூரார்க்கு இரசவாதக்கலை தெளிவாய் தெரிந்தற்கு இது ஓர் சான்றாகும்.
தஞ்சை பெரிய கோவில் ஆண்டு கி.பி 1000 ஆகும். இராஜ இராஜ சோழன் காலத்தே வாழ்ந்த கட்டுமானம் பற்றி அறிந்திராத அந்த காலத்தில் சுற்றிலும் களிமண் பூமியாக உள்ள தஞ்சாவூரில் பெரியகோவில் கட்ட உதவியாக இருந்த ஸ்ரீ மத் கருவூரார் நாம் வணங்கவேண்டியசித்தர். கருவூராரை வணங்க கொங்கு நாட்டில் அற்புத சன்னதி, கருர் ஸ்ரீ பசுபதீஷ்வரர் திருக்கோவிலில் வந்து வணங்கி விட்டு செல்லுங்கள்.