உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க வழிமுறைகள் - How To Reduce Blood Pressure in Tamil
1. உப்பு
அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க முதல் எதிரியான உணவிலுள்ள உப்பைக் குறையுங்கள்.
2. பொட்டாசியம்
தேவையான அளவு பொட்டாசியம் சத்துள்ள உணவுப்பொருள்களை சேர்த்துக் கொள்ளுங்கள். (வாழைப்பழம், உருளைக்கிழங்கு, கீரை வகைகள், பயறு வகைகளில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது)
3. சரிவிகித உணவு
எல்லாச் சத்துக்களும் நிறைந்த சரிவிகித சத்துணவுகளை அதிகமாக உண்ணுங்கள்.
4. உடல் எடை
உடல் எடையை குறையுங்கள்.
5. சுறுசுறுப்பு
உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
6. மதுப்பழக்கம்
மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள் நிறுத்த முயற்சி செய்யுங்கள். மது அருந்தினால் தான் ரத்த அழுத்தம் குறைகிறது என்று சொல்லாதீர்கள்.
7. சிகரெட்
சிகரெட்டை அறவே நிறுத்திவிடுங்கள்.
8. துரித உணவு
துரித உணவுகள் புதிய உணவு வகைகள் முதலியவைகளை சாப்பிடாதீர்கள்.
9. பதப்படுத்தப்பட்ட உணவு
பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள், டப்பாவில் அடைக்கப்பட்ட பெரும்பாலான உணவுப் பொருட்கள் ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும். தொடாதீர்கள்
10. மன அழுத்தம்
மேற்கூறிய விஷயங்கள் எல்லாம் அதிக ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவி செய்யக் கூடியவைகள்தான். ஆனால் இவையெல்லாவற்றையும் விட, உங்கள் மனசு, உங்கள் எண்ணம், உங்கள் வாழ்க்கை நடைமுறைதான் உங்களது ரத்த அழுத்தத்தை அதிகமாக்கும் முக்கியகாரணங்களாகும். மனதுக்கு நிம்மதி கொடுக்கும் நல்ல விஷயங்களைத் தேடிச் செய்யுங்கள் அதிக ரத்த அழுத்தம் வரவே வராது!