Notification texts go here Contact Us Buy Now!

Interesting Facts about Karur District - கரூர் மாவட்டத்தின் சிறப்புகள்

 கரூர் மாவட்டத்தின் சிறப்புத் தகவல்கள் - What is Famous in Karur?


கரூர் மாவட்டத்தின் பல்வேறு சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்!

1. அன்னபூர்ணை நதிக்கரை

சங்க காலத்தில் 'அன்னபூர்ணை' என்று அழைக்கப்படும் அமராவதி நதிக் கரையில் அமைக்கப்பட்ட நகரம் இது



2. தொழில் சிறப்பு

கைத்தறி நெசவு (அரவக்குறிச்சி) தோல் பதனிடுதல் (பள்ளப்பட்டி), சாயமேற்றுதல் (கரூர், அரவக்குறிச்சி), கல் சிற்ப வேலைகள் (சின்னதாராபுரம்) போன்ற தொழில்களில் கரூர் சிறந்து விளங்குகிறது.



3. கல்குவாரி தொழிற்சாலை

தமிழக அரசின் கல்குவாரி தொழிற்சாலை கரூரில் அமைந்துள்ளது.



4. TNPL காகித ஆலை

புகளூரில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித் தாள் மற்றும், காகித நிறுவனத்தில் (TNPL) கரும்புச் சக்கையைக் கொண்டு காகிதம் தயாரிக்கப்படுகிறது. இது ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய காகித ஆலை.

 5. பேருந்து கட்டுமானம்

பேருந்து கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்குகிறது. அனைத்து வாகனங்களுக்கும் தேவையான செயின் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் கரூரில் உள்ளது.



6. சர்க்கரை ஆலை

இந்தியாவின் முதல் சர்க்கரை ஆலையான "பாரி சர்க்கரை ஆலை" வண்டிப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை உற்பத்தியில் உலகளவில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவில் ஈஐடி பாரி நிறுவனம் இதற்கு முன்னோடியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் 1842 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு இன்று மிகப்பெரும் சர்க்கரை ஆலையாக இயங்கி வருகின்றது. தரம் வாய்ந்த உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பு தரும் ஆலை இது.

7. செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன்

கரூர் மாவட்டத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு தொழிற்சாலை செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன். இந்த சிமெண்ட் ஆலை கரூரில் புரியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1962 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு ஏப்ரல் மாதம் 1968 ஆம் ஆண்டு சிமெண்ட் உற்பத்தியை தொடங்கியது. இன்று இந்நிறுவனம் வளர்ச்சியடைந்த சிமெண்ட் உற்பத்தி மட்டுமல்லாது உருக்குத் தொழிற்சாலை பின்னலாடை தொழில் மற்றும் பல்வேறு துறைகளில் வளர்ச்சி பெற்று வருடத்திற்கு 8500 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டித் தருகிறது.

8. தென் திருப்பதி

தாந்தோண்றி மலையில் உள்ள கல்யாண வெங்கட்ராமனஸ்வாமி ஆலயம் "தென் திருப்பதி" என்று அழைக்கப்படுகிறது.

9. கருவூராரின் சொந்த பூமி

திருவிசைப்பா பாடிய ஒன்பதின்மர்களில் ஒருவரான கருவூர்த் தேவர் பிறந்த இடம் இந்த மாவட்டம்.

10. கொசுவலை மற்றும் ரத்தினக் கல்

ஏற்றுமதி தரத்திலான கொசுவலை உற்பத்தி மற்றும் பாரம்பரியத் தொழிலான ரத்தினக் கல் வியாபாரத்திற்கு பெயர் பெற்றது.

11. பசுபதீஸ்வரர் திருக்கோயில்

புண்ணிய சிவத் தலங்கள் ஏழில் ஒன்று கரூர். இந்தப் பெருமையைப் தேடித்தந்தது பசுபதீஸ்வரர் கோயில். இங்கு சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன் பிரும்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும் ரங்கமாதா சிற்பமும் வேலைப்பாடுகளில் தனித்தன்மை மிக்கவை.

12. ஆத்துப்பாளையம் அணை

1980-ல் தொடங்கி 1992 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட அணை நொய்யல் ஆத்துப்பாளையம் அணை. 19,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக உருவாக்கப்பட்டது இந்த அணை. 5 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவுகள் கலந்ததால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உயர் நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. 2019-ல் பெய்த மழையால் 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அணை நிரம்பியது.


Related Searches

  1. What is Karur Known For?

About the Author

Hello I'm the Authour and Admin of Muththamizh Blog Website facebooktwittertelegraminstagram

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.