மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில், "இமா கெய்தல்" என்ற பழம்பெரும் மார்க்கெட், 500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
'மகளிர் சந்தை' என்று அழைக்கப்படும் இந்த மார்க்கெட்டில் திருமணமான பெண்கள் மட்டும் தான், வியாபாரம் செய்ய முடியும். ஆண்கள், இங்கு வந்து பொருட்கள் வாங்கலாம். திருமணமாகாத பெண்கள், உதவியாளர்களாக பணிபுரியலாம்.
இந்த மார்க்கெட்டில், அனைத்து விதமான காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுகின்றன. ஆனால், மாமிசம் விற்கப்படுவதில்லை.
ஆனால் கருவாடுகளுக்கென தனிப் பிரிவே செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டில், அனைத்து விதமான காய்கறிகளும் பழங்களும் விற்கப்படுகின்றன. ஆனால், மாமிசம் விற்கப்படுவதில்லை.
ஆனால் கருவாடுகளுக்கென தனிப் பிரிவே செயல்பட்டு வருகிறது.
16-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இந்த மார்க்கெட், 2010-ல் இந்த வடிவமைப்பை பெற்றது.
இந்த மார்க்கெட்-ல் ஏறத்தாழ 5,000 அனுமதி பெற்ற பெண்கள் காய்கறி, பழங்கள், அழகுசாதனப் பொருட்கள், பாரம்பரிய மற்றும் கைத்தறி ஆடைகள், கைவினைப் பொருட்கள், மீன் ஆகியவற்றை விற்பனை செய்கின்றனர்.
மணிப்பூரில் உள்ள இந்த மார்க்கெட் இந்தியாவில் பெண்களின் தொழில் முன்னேற்றத்திற்கும், பாலின சமத்துவத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக கருதப்படுகிறது.