படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானது நினைவு ஆற்றல். கண்டதையெல்லாம் மூளையில் ஏற்றி வைத்தால், தேவையானதற்கு இடம் இருக்காது.
மனம் என்பது கோடான கோடி விஷயங்களை பதிந்து வைத்திருகும் கிடங்கு. ஊர் கதைகள், வம்புகள், கெட்டண்ணங்கள், சோகம், பிறர் செய்த தீமைகள்.
இவைகளையெல்லாம் உங்கள் மனதிலிருந்து எடுத்து வெளியில் கொட்டுங்கள்.
பிறகு இதுபோன்ற எண்ணங்களுக்கு உடனே 'நோ என்ட்ரி' ஆக்கிவிடுங்கள். 99 சதவீதம் உங்கள் மனம் காலியாகிவிடும்.
அதில் கல்வியை, கலையை, புதிய திறமைகளை புதிய முன்னேற்றங்களை நிரப்புங்கள். இவைகளுக்கு மட்டும் என்ட்ரி கொடுங்கள்.
நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி மாங்கனீசு சத்துக்கு உண்டு. தேங்காய், வாதுமை கொட்டை ஆகியவற்றில் மாங்கனீசு சத்து நிறைந்துள்ளது.