ஆரஞ்சு என்றால், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் தான் நினைவுக்கு
வரும்.
நாக்பூரை, 'ஆரஞ்சு சிட்டி' என, அழைத்தாலும், பழ தோட்டங்கள் அனைத்தும், 200 கி.மீ., தொலைவில் ) உள்ள, அமராவதி நகரில் தான் இருக்கின்றன. இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆரஞ்சு தோட்டங்கள் உள்ளன.
இங்கிருந்து தான், பெருமளவில் தென்மாநிலங்களுக்கு ஆரஞ்சுகள் வருகின்றன. ஒரு ஆரஞ்சு மரத்தின் ஆயுள், 35 ஆண்டுகள். அக்டோபரிலிருந்து, பிப்ரவரி வரை பழங்கள் அறுவடை நடைபெறுகிறது.
மரத்திலிருந்து பறிக்கப்படும் பழங்களின் ஆயுள், இரண்டு வாரம் என்பதால், பறித்தவுடன் லாரிகளில் ஏற்றி அனுப்பி விடுவர். அமராவதி நகர் முழுவதும் ஆரஞ்சு பழங்களின் நறுமணம் வீசியபடியே இருக்கும்.