இந்த இசைப் படிக்கெட்டுகள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் எம்.ஜி சாலை மெட்ரோ நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இசைப் படிக்கட்டுகள் தான் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ஒருவர் இந்தப் படிக்கட்டில் ஒவ்வொருபடியாக ஏறி செல்லும் போது, அவை கீபோர்டில் ஒலிக்கும் இசையை எழுப்புவதால், அனைத்து வயது மக்களும் இந்த படிக்கட்டுகளை உற்சாகத்துடன் பயன்படுத்துகின்றனர்.
இந்தப் படிக்கெட்டுகளின் இருபுறமும் சென்சார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சென்சார் மூலம் ஒருவர் படிக்கெட்டில் நடக்கும் போது விதவிதமான இசையை நாம் கேட்க முடிகிறது.
இந்த இசைப் படிக்கெட்டுகள் Musical Stairs அல்லது Piano Stairs என்று அழைக்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இவ்வகையான இசைப் படிக்கெட்டுகள் பிரபலமானது. இந்த வகை படிக்கெட்டுகளில் நடனமாடி சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் இந்த ஏரியா "இளசுகள்!"