சயன கோலத்தில் ஸ்ரீராமர் அருளும் அற்புதமான திருக்கோவில்!
நின்ற கோலத்தில் ஸ்ரீராமர் அருள் தரும் திருக்கோவில்களைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் தமிழ் நாட்டில் ஒரு திருக்கொவிலில் ஸ்ரீராமர் ரங்கநாதரப்போல் சயனக் கோலத்தில் எழுந்தருளியுள்ளர்.
அந்தத் திருக்கோவில் தஞ்சாவூர், சுவாமி மலை அருகில் உள்ள, திருப்புள்ளபூதங்குடி ராமர் திருக்கோவில் ஆகும்.
இந்தத் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனை ராம நவமி நாளில் வழிபடுவது இரட்டிப்பு பலணத்தரும்.
ராவணன் சீதையை கவர்ந்து சென்ற போது அரசன் ஜடாயு, அவனுடன் போரிட்டார். ஜடாயுவை, ராவணன் வெட்டினான். குற்றுயிராக கிடந்தவர், அவ்வழியே வந்த ராம, லட்சுமணரிடம், சீதையை, ராவணன் கவர்ந்து சென்ற விஷயத்தை கூறி, உயிர் விட்டார்.
ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்ய எண்ணினார், ராமர். ஈமக்கிரியை செய்யும்போது, மனைவி அருகில் இருக்க வேண்டும் என்பது விதி. சீதை இல்லை என்பதால், மானசீகமாக சீதையை மனதால் நினைத்தார். உடனே, ராமனுக்கு உதவி புரிவதற்காக, சீதையின் மறு அம்சமான பூமாதேவி வந்தாள். அவளுடன் இணைந்து, ஈமக்கிரியை செய்தார். இந்த நிகழ்வை நினைவு கூரும் வகையில், இத்தலத்தில் கோவில் அமைக்கப்பட்டது.
பொதுவாக, ராமர் நின்ற கோலத்தில் தான் அருள் பாலிப்பார். ஆனால், இத்தலத்தில், 'வல்வில் ராமன்' என்ற பெயரில், சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.