சுப்பிரமணிய சிவா -ன் வாழிக்கை வரலாறு!
ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து, சுப்பிரமணிய சிவா, ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்தார். இவரைத் தடுப்ப்பதற்காக, அவரது உடலிலுள்ள தொழுநோயை காரணம் காட்டி, சிவா இனிமேல் ரயிலில் பயணம் செய்யக்கூடாது என, 1924ல் தடை விதித்தது ஆங்கிலேய அரசு.
எனினும் மனம் தளராத சுப்பிரமணிய சிவா, குதிரை மற்றும் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து தொடர்ந்து பிரசாரம் செய்து தனது சுதந்திரத்திற்கான பிரச்சாரத்ததை செய்து வந்தார். அத்துடன் நாடகங்களையும் நடத்தினார். இதற்கு மக்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது.
தர்மபுரி பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு, ஒரு கோவில் கட்டியிருந்தார். ஜூலை 21, 1925ல் சிவாவின் உடல்நிலை மோசமடைந்தது. அந்த நிலையில் பாப்பாரப்பட்டிக்குச் செல்ல விரும்பினார். சிவா. ரயிலில் பயணம் செய்ய தடை இருந்தாலும், ரயிலிலேயே அழைத்துச் செல்லும்படி கூறி, அதற்கான வழி ஒன்றையும், தன் சீடரான சுந்தரபாரதியிடம் ரகசியமாக கூறினார்.
சிவாவின் முழு உடலை, கம்பளியால் போர்த்தி, 'டிராலி' வண்டியில் உட்கார வைத்தார். கால் இல்லாத முடம், உடல் நிலையும் சரியில்லாதவர் என்று கூறி, ரயில்வே பிளாட்பார போலீஸ்காரரை ஏமாற்றி, வெகு சிரமப்பட்டு, ஜூலை 22ல், பாப்பாரப்பட்டிக்கு, சிவாவை அழைத்து சென்றார், சுந்தரபாரதி. மறுநாள், ஜூலை 23, வியாழக்கிழமை அதிகாலை, 6:00 மணியளவில், சிவாவின் உயிர் பிரிந்தது. அப்போது, அவருக்கு வயத 41 கூட நிறைவடையவில்லை.
Source : எழுத்தாளர், ரகமி எழுதிய நூலிலிருந்து.
Thanks To : Dinamalar